×

கான்ஜூரிங் கண்ணப்பனில் ரெஜினா

சென்னை: சதீஷ், பவித்ரா இணைந்து நடித்து வெளியான படம் ‘நாய் சேகர்’. கிஷோர் ராஜ்குமார் இந்த படத்தை இயக்க, அனிருத் படத்திற்கு இசையமைத்தார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சதீஷ் நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என தலைப்பு வைத்துள்ளனர். சதீஷ் கதாநாயகனாக நடிக்க அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் படத்தை எழுதி இயக்குகிறார். படத்தின் டைட்டில் டிசைனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தங்களது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. ஹாரர் காமெடியாக உருவாகும் இந்த படத்தில் ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், நாசர் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

The post கான்ஜூரிங் கண்ணப்பனில் ரெஜினா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Regina ,Chennai ,Satish ,Pavitra ,Shekhar ,Kishore Rajkumar ,Anirudh ,AGS ,Sathish ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு திடீர்...