- மெல்போர்ன்
- ஜூனியர் என்டிஆர்
- RRR
- என்டிஆர்
- ராஜமாவுலி
- ராம் சரன்
- ஜூனியர் NDR ரசிகர்கள் கார் பேரணி
- தினகாரான்
சென்னை: ஆர்ஆர்ஆர் படத்துக்காக ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள், மெல்போர்னில் கார் பேரணி நடத்தி அசத்தினர்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட் நடித்துள்ள படம், ஆர்ஆர்ஆர். நாளை மறுநாள் இந்த படம் தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதையொட்டி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரு சில நாடுகளில் ரசிகர்களே புரமோஷன் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரிலுள்ள ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள், கார் பேரணி நடத்தி ஆர்ஆர்ஆர் படத்துக்கு வரவேற்பு அளித்துள்ளனர். 70க்கும் மேற்பட்ட கார்களில் அவர்கள் மெல்போர்ன் நகரிலுள்ள குறிப்பிட்ட பகுதிகளில் பேரணி நடத்தினர். பிறகு காரிலேயே ‘ஜெய் என்டிஆர் ஆர்ஆர்ஆர்’ என்ற லோகோவை வடிவமைத்தனர். இது குறித்து ரசிகர்கள் கூறும்போது, ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜூனியர் என்டிஆரின் படம் திரைக்கு வருகிறது. அதை கொண்டாடும் விதமாக இந்த பேரணி நடத்தியுள்ளோம்’ என்றனர்….
The post ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் மெல்போர்னில் கார் பேரணி appeared first on Dinakaran.