×

டிரக்கர், கார் விபத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி; முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ராதாபுரம் வட்டம், திருவம்பலபுரம், தோட்டபள்ளி அருகில் கடந்த 22ம் தேதி டிரக்கர் வாகனமும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்ட விபத்தில் டிரக்கர் வாகனத்தில் பயணம் செய்த திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம் கரைசுத்துபுதூர் கிராமம், தெற்கு புலிமான்குளத்தைச் சேர்ந்த சந்தனகுமாரி (42) மற்றும் முத்துச்செல்வி (30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். மேலும் விபத்தில் காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

The post டிரக்கர், கார் விபத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி; முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Radhapuram Circle ,Thiruvambalapuram ,Thotapally ,Tirunelveli District ,Vektianvilai Circle ,
× RELATED தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து