×

பாகுபலிக்கும் வெப்பனுக்கும் தொடர்பு: சத்யராஜ் கலகல

சென்னை: சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘வெப்பன்’. புதிய டெக்னாலஜியில் வெளியீட்டிற்கு தயாராகி வரும் இந்தப் படத்தை மில்லியன் ஸ்டூடியோ மன்சூர் தயாரிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் குகன் பேசும்போது, ‘எந்த ஒரு தயாரிப்பாளரும் இந்த கதைக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் தர யோசிப்பார்கள். என் கேரியரில் நிச்சயம் இது மிகப் பெரிய படி. டிசி, மார்வெல் போல புதிய ஒரு உலகை உருவாக்க விரும்பினோம். ராஜீவ் மேனன் சார் சிறப்பாக செய்துள்ளார். தான்யா ஹோப் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்’ என்றார்.

நடிகர் வசந்த் ரவி பேசியதாவது, ‘டிசி போல தமிழ், தெலுங்கிலும் இந்த கான்செப்ட் நிச்சயம் வெற்றி பெரும் என இயக்குனர் நம்பிக்கையாக இருந்தார். படத்தில் ஒரு சூப்பர் ஹுயூமன் கதாபாத்திரம் உள்ளது. அதை சத்யராஜ் சார் செய்கிறார் என இயக்குநர் சொன்னார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி’. சத்யராஜ் பேசும்போது, ‘இதுபோன்ற கதைகளில் நாங்கள் ஹீரோக்கள் இல்லை. இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டீம், தயாரிப்பாளர்கள் தான் ரியல் ஹீரோஸ். இதுபோன்ற படங்களுக்கு தயாரிப்பாளர் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் செலவு செய்ய வேண்டும். ‘பாகுபலி’ படத்தின் போது தயாரிப்பாளர் சோபுவை பார்த்து பிரபாஸ் என்னிடம் விளையாட்டாக, ‘பாருங்க சார், யாரோ பணம் போட்டு படம் எடுப்பது போல ஜாலியாக வந்து போகிறார்’ என்று சொல்வார். அதே போலவே மன்சூர் சாரும் உள்ளார்’ என்றார்.

The post பாகுபலிக்கும் வெப்பனுக்கும் தொடர்பு: சத்யராஜ் கலகல appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sathyaraj ,Chennai ,Vasanth Ravi ,Tanya Hope ,Gugan Chenniappan ,Million Studio Mansoor ,Gugan ,Sathyaraj Kalakala ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...