×

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் கடன் உத்தரவாத நிதியம் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ.12 கோடியில் 3 புதிய கட்டிடங்களும் திறப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ரூ.12 கோடி செலவிலான 3 புதிய கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் கடன் உத்தரவாத நிதியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தி பொருட்களுக்காக தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.40 லட்சத்துக்கு குறைவான வங்கி கடன்களுக்கு 90 சதவிகித உத்தரவாதமும், ரூ.40 லட்சத்துக்கு மேல் ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கு 80 சதவிகித உத்தரவாதமும் ஒன்றிய அரசின் குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசு 6 மாதங்களுக்குள் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த கடன் உத்தரவாத திட்டத்துடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விரிவான மதிப்பீட்டு திட்டமும் ஒருங்கிணைந்து வழங்கப்படும்.  இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் 6 மாதத்தில் தொடங்கப்படும் வகையில் முழுவதுமாக கணினிமயமாக்கப்பட்ட இணையதளம் தயாரிக்கும் பொருட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமை செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் கடன் உத்தரவாத நிதியம் ஆகியவற்றிற்கு இடையே  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ரூ.12.02 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்டம்,  பூதலூர் கயிறு  குழுமத்தின் தென்னை நார் உற்பத்தி கூடம், காக்களூர் – மத்திய மின்பொருள்   சோதனை கூடத்தில் எல்.இ.டி விளக்குகள்  மற்றும்  பொருத்திகளுக்கான பிரத்யேக சோதனைக்கூடம், விருத்தாசலம் – பீங்கான் தொழில் நுட்பக்கல்வி  நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி  ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர்  இறையன்பு, துறை செயலாளர் அருண்ராய், தொழில் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், கடன் உத்தரவாத நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி சந்தீப் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்….

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் கடன் உத்தரவாத நிதியம் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ.12 கோடியில் 3 புதிய கட்டிடங்களும் திறப்பு appeared first on Dinakaran.

Tags : CM. G.K. ,Stalin ,Chennai ,B.C. G.K. ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...