×

ஏஐ தொழில்நுட்பம் வடிவேலு கருத்து

சென்னை: மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரிக்க, ஏ.குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள படம், ’வெப்பன்’. விரைவில் திரைக்கு வரும் இப்படத்தில் சத்யராஜ், வசந்த் ரவி ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் திரில்லர் கதை கொண்ட இப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் மலைப்பிரதேசங்களில் நடந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இப்படம் குறித்து வடிவேலு கூறுகையில், ‘எனது அன்பு அண்ணன் சத்யராஜ் ‘வெப்பன்’ படத்தில் நடித்துள்ளார். உலக அளவில் செல்ல வேண்டும் என்பதற்காக, பான் இந்தியா அளவில் இப்படத்தை மன்சூர் தயாரித்துள்ளார். படத்தில் முதல்முறையாக ஏஐ டெக்னாலஜியை உபயோகப்படுத்தி இருப்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது. ‘வெப்பன்’ படத்தை அனைவரும் தியேட்டரில் பாருங்கள்’ என்றார். இப்படத்தில் வடிவேலு நடிக்கவில்லை. ஆனால், எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கும் அடுத்த படத்தில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார்.

The post ஏஐ தொழில்நுட்பம் வடிவேலு கருத்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,A. Gugan Chenniappan ,MS Mansoor ,Million Studio ,Sathyaraj ,Vasant Ravi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...