×

ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 4 டாக்டர்கள் ஆஜராக சம்மன்: இதய நோய் நிபுணர் ஒய்.வி.சி ரெட்டியிடம் விசாரிக்க திட்டம்

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் வரும் 15ம் தேதி 4 டாக்டர்கள் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் கடந்த 7ம் தேதி டாக்டர்கள் அருள் செல்வம், பாபு மனோகர், ராமகிருஷ்ணன், சுந்தர், தொழில்நுட்ப உதவியாளர் காமேஷ்  ஆகிய 5 பேர் ஆஜரானார்கள். தொடர்ந்து மறுநாள் 8ம் தேதி நரம்பியல் நிபுணர் மீனாட்சி சுந்தரம், இருதவியல் நிபுணர் மதன்குமார், தோல் மருத்துவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.  இந்த விசாரணையில், கடந்த 2016 சட்டசபை தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த விசாரணையின் போது, ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4ம் தேதி கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்ட போது, அதே வார்டில் வைத்து ஆபரேஷன் நடந்தது ஏன் என்பது குறித்தும், இந்த நடைமுறை சரிதானா என்பது குறித்து டாக்டர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டன. இந்த விசாரணையின் போது, ஜெயலலிதா உயிரை காப்பாற்ற முயற்சி நடந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆணையம் ஏற்கனவே, டாக்டர்களிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில், அது தொடர்பாக ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். இந்த விசாரணையில் உயிர்காக்கும் முயற்சிகள் நடந்தது சரியாக இருந்தாலும், ஜெயலலிதாவை ஆபரேஷன் தியேட்டரில் அழைத்து செல்லாமல் அதே வார்டில் வைத்து அறுவை சிகிச்சை செய்தது ஏன் என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இது போன்ற குறைகளும், அவரது உடல் நிலை மோசமடைய காரணமாக இருக்கலாமோ என்று ஆணையத்துக்கு சந்தேகிக்கிறது.இந்த சூழ்நிலையில், அப்போலோ மருத்துவமனை  டாக்டர்கள் சஜ்ஜன் ஹெக்டே (எலும்பியல் நிபுனர்), ராம்கோபால் கிருஷ்ணன் (தொற்று நோய் மருத்துவர்), சிவஞான சுந்தரம் (நீரழிவு நோய் சிறப்பு மருத்துவர்) ஆகிய மூன்று டாக்டர்கள் வரும் 15ம் தேதி  விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பபட்டுள்ளது. அதே போன்று ஜெயலலிதா சிகிச்சையை கண்காணிக்க அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவில் இருந்த ஸ்டாலின் மருத்துவமனை டாக்டர் நந்தகுமார் விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பபட்டுள்ளது. அவர்களிடம் எய்ம்ஸ் மருத்துவ குழு முன்னிலையில், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்கிறார். இந்த விசாரணையின் போது, எய்ம்ஸ் மருத்துவ குழு, ஆணையம் சார்பில் சில சந்தேகங்களை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய நோய் நிபுணர் ஒய்.வி.சி ரெட்டி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது, ஜெயலலிதாவுக்கு இதய வால்வில் ஏற்பட்ட தொற்று பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று ஆரம்பத்தில் டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த டாக்டர்களின் கூற்றுப்படி அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இருந்தால் ஒருவேளை அவர் பிழைத்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஜெயலலிதா இறக்கும் வரை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. இது தொடர்பாக டாக்டர் ஓய்.வி.சி. ரெட்டியிடம் விசாரிக்க ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. …

The post ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 4 டாக்டர்கள் ஆஜராக சம்மன்: இதய நோய் நிபுணர் ஒய்.வி.சி ரெட்டியிடம் விசாரிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Arumukasamy Inquiry Commission ,Jayalalitha ,Aajar Samman ,C ,Chennai ,Arumukchamy Inquiry Commission ,Jayalalithah ,C Reddy ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…