×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் 10 கோடி கடந்து சாதனை

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெறும் ‘அரபிக்குத்து’ பாடல். யுடியூப்பில் 100 மில்லியன் (10 கோடி) கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம், ‘பீஸ்ட்’. இதை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் என்பதால், ‘பீஸ்ட்’ படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் இடம் பெறும் ‘அரபிக்குத்து’ என்ற டூயட் பாடல் கடந்த 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய இந்தப்பாடலை அனிருத், ஜொனிதா காந்தி சேர்ந்து பாடியுள்ளனர். ‘ஹலமதி ஹபீபோ’ என்று தொடங்கும் இப்பாடல் காட்சியில் விஜய், பூஜா ஹெக்டே இணைந்து ஆடிப் பாடுகின்றனர். அரேபிய இசையில் மிகவும் வித்தியாசமான குத்துப்பாடலாக அமைந்துள்ள இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாடல் வெளியானதும் டிவிட்டரில் ‘அரபிக் குத்து’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. அதுபோல், இப்பாடல் யுடியூப்பில் வைரலானது. இந்தப் பாடல் வெளியாகி 13 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது யுடியூப்பில் 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் ஹிட்டான பல படங்களின் பாடல்களை ‘அரபிக்குத்து’ பாடல் ஓரம்கட்டியுள்ளது. மேலும், ‘அரபிக்குத்து’ பாடல் வெளியான நாள் முதற்கொண்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் விஜய் ஆடிய நடன அசைவுகளை பின்பற்றி நடனமாடி, அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில்  பதிவு செய்து வருகின்றனர்….

The post சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் 10 கோடி கடந்து சாதனை appeared first on Dinakaran.

Tags : vijay ,sun ,Chennai ,Sun Pictures ,YouTube ,
× RELATED மிகப் பெரிய காரியங்களுக்கு மிகச் சிறிய காரணங்கள் போதும்!