×

மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோயிலில் 1008 பால்குட அபிஷேகம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இணை கோயிலான கோலவிழியம்மன் கோயிலில் மாசி மாத 1008 பால்குட விழா நேற்று நடந்தது. முன்னதாக, காலை 8 மணியளவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து 1008 பால் குடங்கள் புறப்பாட்டினை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கோயிலில் இருந்து 1008 பால் குடங்கள் வீதியுலா புறப்பட்டு கபாலீஸ்வரர் கோயிலின் மாட வீதிகளைச் சுற்றி, கச்சேரி சாலை, அருண்டேல் சாலை, பஜார் சாலை, காரணீஸ்வரர் கோயில் தெரு, வாலீஸ்வரர் கோயில் தெரு, ஜி.என்.செட்டி தெரு வழியாக இறுதியாக கோலவிழியம்மன் கோயில் சென்றடைந்தது. அங்கு, கோலவிழியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, பால் குடம் சுமந்து வந்த பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்,  இணை ஆணையர் காவேரி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்….

The post மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோயிலில் 1008 பால்குட அபிஷேகம்: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,1008 Balkuda Anointing ,Mayilapur Kolavizhiyamman Temple ,Chennai ,1008 Balkuta Festival of Masi Month ,Kolavizhiyamman Temple ,Kapaleeswarar Temple ,Mayilapur ,Mayilapur Kolavijayamman Temple ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி