×

திருச்சியை சேர்ந்த தனியார் நிதிநிறுவனம் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி: தலைமறைவான பாஜக பிரமுகரை கைது செய்யக் கோரிக்கை

மதுரை: திருச்சியை சேர்ந்த தனியார் நிதிநிறுவனம் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி செய்ததை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை ஒத்தக்கடையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாத்தூரை சேர்ந்த ராஜா அவரது சகோதரர் ரமேஷ் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு பல்வேறு பெயர்களில் நிதிநிறுவனம் நடத்தி கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி சம்பவம் குறித்து ராஜா, ரமேஷ் உள்ளிட்ட 15 பேர் மீது திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றகிளையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணத்தை மீட்டு தரக்கோரியும், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் மதுரை ஒத்தக்கடையில் இருந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை  நோக்கி பேரணியில் ஈடுபட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.     …

The post திருச்சியை சேர்ந்த தனியார் நிதிநிறுவனம் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி: தலைமறைவான பாஜக பிரமுகரை கைது செய்யக் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Trich ,Bajaka Mangarh ,Madurai ,Trichy ,Bajaka ,Mangaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!