×

திருமணமாகாமல் கர்ப்பமான இலியானாவின் கணவர் யார்?சஸ்பென்ஸ் நீடிப்பு

மும்பை: திருமணமாகாமல் கர்ப்பமான நடிகை இலியானாவின் கணவர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிப்பதால், அவரது ரசிகர்கள் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். தமிழில் ‘கேடி’, ‘நண்பன்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர், இலியானா. தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி களில் நடித்து வரும் அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்தார். இன்னும் திருமணமாகாத நிலையில், அவரது கணவர் யார் என்றே தெரியாத நிலையில், எப்படி இலியானா கர்ப்பமானார் என்று அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், இலியானாவுக்கு பிறக்கும் குழந்தையின் தந்தை யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், தற்போது மற்றொரு பதிவை இலியானா வெளியிட்டுள்ளார். அப்பதிவில், இலியானா கர்ப்பமாக இருக்கும் போட்டோவையும், அதனுடன் முகம் தெரியாத அவரது காதலனின் போட்டோவையும் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் அவரை முத்தமிடுவது போல் காணப்படுகிறது. முன்பு மாதிரியே இப்போதும் காதலனின் போட்டோவில் அவரது முகம் தெரியாததால், அந்த நபர் யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

The post திருமணமாகாமல் கர்ப்பமான இலியானாவின் கணவர் யார்?சஸ்பென்ஸ் நீடிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ileana ,Mumbai ,Iliana ,Ilyana ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!