×

உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாயார் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசனின் தாயார் ராஜாமணி அம்மாள் (83). இவர், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியக்  குழு முன்னாள் தலைவர் தா.மோகலிங்கத்தின் மனைவி ஆவார். இவர்களுக்கு அமைச்சர்  தா.மோ.அன்பரசன், தா.மோ.எழிலரசன் என்ற 2 மகன்களும், கனிமொழி, பவானி, கண்மணி  ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ராஜாமணி அம்மாளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர்.  நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். இதையடுத்து, ராஜாமணி அம்மாள் உடல் நேற்று காலை குன்றத்தூரில் உள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசனின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.நேற்று காலை 7.45 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து, ராஜாமணி அம்மாளின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவெல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆகியோர் உடன் வந்தனர்.   ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, செல்வபெருந்தகை, காஞ்சிபுரம்  மாவட்ட ஊராட்சிகளின் தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை குன்றத்தூர் இடுகாட்டில் ராஜாமணி அம்மாள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது….

The post உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாயார் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Minister TMO ,Anparasan ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Kanchipuram ,North ,District ,DMK ,Tamil Nadu Micro, Small and Medium Enterprises Department ,Minister ,Mr. ,Mo. Anparasan ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...