×

ஆலந்தூர் 165வது வார்டில் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பேன்: காங்கிரஸ் வேட்பாளர் உறுதி

ஆலந்தூர்: ஆலந்தூர் 165வது வார்டு திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் நேற்று ஆதம்பாக்கம், பாரத் நகர், பாலாறு தெரு, பவானி தெரு, கிருஷ்ணா தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், `கை சின்னத்தில் போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்தால் வார்டில் தாழ்வாக உள்ள சிறு பாலங்களை உயர்த்தித் தருவேன். மழைநீர் கால்வாய்களை தூர்வாரி மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வேன். பூங்காக்களை தரம் உயர் த்தி தருவேன். சுற்றுப்புற சுகாதாரத்தை காப்பேன். மக்களின் குறைகளை கேட்பேன்’ என்றார்.  இந்த வாக்குசேகரிப்பின்போது ஆலந்தூர் தெற்கு பகுதி காங்கிரஸ் தலைவர் ஆதம் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ஆர்.பாபு, மாவட்ட பிரதிநிதி லியோ பிரபாகரன், ஜி.ரமேஷ், ஜி.சுதாகர், கிறிஸ்டோபர், ராஜ்குமார், வழக்கறிஞர், ஆனந்தகுமார், பெருமாள், சரவணன், சு.கதிரவன். பச்சையப்பன் தினேஷ், சத்யா, இளையராஜா, அய்யனார், மணிகண்டன், குணா, சிவா, கிருஷ்ணன், காங்கிரஸ் சார்பாக எஸ்.ரமேஷ், கே.ரவிக்குமார், எஸ்.வடிவேல் சுரேஷ் ஸ்ரீராம், ஜெய்கணேஷ், தேவராஜ், மதிமுக சார்பாக கராத்தே பாபு, ஜி.திருநா உள்பட பலர் கலந்துகொண்டனர்….

The post ஆலந்தூர் 165வது வார்டில் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பேன்: காங்கிரஸ் வேட்பாளர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Alandur ,165th Ward ,Congress ,Alandur 165th Ward DMK Alliance's ,Nanjil V. Iswara Prasad ,Adambakkam, Bharat Nagar ,
× RELATED ஆதம்பாக்கம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க கோரிக்கை