- அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு
- காங்கிரஸ்
- முதல்வர் G.K ஸ்டாலின்
- சோனியா காந்தி
- தில்லி
- ஸ்ரீ டவிகா
- நாடாளுமன்ற முன்னேற்றக் கழகம்
- TD
- ஆர் பாலு
- இந்திய தேசிய காங்கிரசு
- முதல்வர்
- கி.மு.
- ஜி.கே.
- ஸ்டாலின்
- தின மலர்
டெல்லி: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்களை நேரில் சந்தித்து, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தை ஒப்படைத்தார். உடனடியாக, திருமதி. சோனியா காந்தி அவர்கள், அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக திரு. வீரப்ப மொய்லி அவர்களை நியமித்து, மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களுக்குப் பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இச்சந்திப்பின்போது, திரு. ராகுல் காந்தி அவர்களும் உடனிருந்தார். அதோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. து.ராஜா அவர்கள் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்க தானும், தான் சார்ந்த இயக்கமும் ஜனநாயக – மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகளுடன் இணைவதாகவும், இதுகுறித்து. நேரில் கலந்தாலோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சீதாராம் யெச்சூரி அவர்கள், சமூகநீதிக் கருத்தியலை தேசிய அளவில் முன்னெடுப்பதற்காக வாழ்த்து தெரிவித்து, இந்த அமைப்பினை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து நாம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி அவர்கள் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த முன்னெடுப்பினைப் பாராட்டி, இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி முழு ஒத்துழைப்பினை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்….
The post அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்தது காங்கிரஸ்; முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றார் சோனியா காந்தி.! appeared first on Dinakaran.
