மும்பை : விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அஜித் பவாரின் எதிர்பாராத மரணம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. கடின உழைப்பாளியான அஜித் பவார் மராட்டிய மக்களுக்கு சேவை செய்வதில் பிரதானமாக கொண்டிருந்தார். விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றம் மற்றும் அரசின் நிர்வாகம் பற்றிய அவரது புரிதல் குறிப்பிடத்தக்கது.
