×

மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது

மும்பை: மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது. மராட்டியத்தில் பாராமதி என்ற இடத்தில் விமானம் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியது. சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. பாராமதியில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அஜித்பவார் விமானத்தில் சென்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது

விமான விபத்தில் சிக்கிய மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானம் விபத்து நிகழ்ந்த இடத்தில் பெரிய புகை மண்டலமாக காட்சியளிப்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. விமானம் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : Deputy Chief Minister ,Ajit Bawar ,Mumbai ,Paramati ,Marathia ,
× RELATED ராயபுரம், தீவுத்திடல் தற்காலிக...