×

என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் எம்.எம்.சி தவறு செய்ததா?

சென்னை: இந்தியாவில் உள்ள இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், மேலாண்மை போன்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் பல்வேறு அளவுருக்கள் அடிப்படையில் மதிப்பிட்டு தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) தரவரிசை வழங்கப்படுகிறது. இதை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய கல்வித் துறை அமைச்சகம் வெளியிடுகிறது. இந்நிலையில், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.) 2024ம் ஆண்டுக்கான என்.ஐ.ஆர்.எப். தரவரிசைக்காக அளிக்கப்பட்ட தரவுகளில் சில தவறான விவரங்களை வழங்கியதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வைரல் ஆகி வருகின்றன. அதாவது, மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்ததில் தவறான உள்ளீடுகளை பதிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

வெளிமாநில மாணவர்கள் விவரங்களில் 307 என்பதற்கு பதிலாக 622 என்ற எண்ணிக்கையை காட்டியதாகவும், தரவரிசைக்கான முக்கிய அளவுருக்களில் ஒன்றான மதிப்பெண் சார்ந்த விவரத்தையும் இரட்டிப்பாக்கி காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் அதுபற்றி பதில் கூறவில்லை. சென்னை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று மறுத்துவிட்டனர்.

 

The post என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் எம்.எம்.சி தவறு செய்ததா? appeared first on Dinakaran.

Tags : NIRF ,MMC ,Chennai ,National Institutional Ranking Framework ,India ,Union Ministry of Education… ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...