×

ஒலிம்பிக் தீபத்துடன் சீனப் பெருஞ்சுவரில் ஓடிய ஜாக்கிசான்

பீஜிங்: சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் போட்டிகள் வரும் 6ம் தேதி துவங்கி,  பிப்ரவரி 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா பாதிப்புக்கு நடுவே இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக பீஜிங்கில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு நடத்தப்படும் தீபத் தொடர் ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 67 வயதான நடிகர் ஜாக்கிசானும் கலந்துகொண்டுள்ளார். நேற்றுமுன்தினம் ஜாக்கிசான் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திக்கொண்டு சீனப் பெருஞ்சுவரின் மீது ஓடிவந்தார். முன்னதாக அந்நாட்டின் கோடைக்கால அரண்மனையில் துவங்கிய இந்த தீபத்தொடர், சீனப்பெருஞ்சுவர் மற்றும் முக்கிய அடையாளச் சின்னங்களை கடந்து செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜாக்கிசானை பார்த்ததும் அங்கு வந்திருந்த ஏராளமான மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஜாக்கிசானுடன் அவர்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். …

The post ஒலிம்பிக் தீபத்துடன் சீனப் பெருஞ்சுவரில் ஓடிய ஜாக்கிசான் appeared first on Dinakaran.

Tags : Jackie Chan ,Great Wall of China ,Olympic ,Beijing ,Winter Olympic Games ,China ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…