செம்ஸ்ஃபோர்ட்: 19 வயதுக்கு உட்பட்டோர் கொண்ட இந்தியா – இங்கிலாந்து இளையோர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது, 4 நாள் டெஸ்ட் போட்டி, செம்ஸ்ஃபோர்டில் நேற்று துவங்கியது. முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஆடம் தாமஸ், டாவ்கின்ஸ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
ராக்கி பிளின்டாப் 16 ரன்னில் வீழ்ந்தார். இடையில் நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டு மீண்டும் துவங்கியது. 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 59 ரன் எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் ஆதித்ய ராவத் 2 விக்கெட் வீழ்த்தினார்.
The post 2வது இளையோர் டெஸ்ட் இங்கிலாந்து திணறல் appeared first on Dinakaran.
