×

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

 

ராமேஸ்வரம், ஜூலை 19: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நான்கு ரதவீதியில் சாலையின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் ஆக்கிரமித்துள்ளன. ரதவீதியில் சாலையின் இருபுறமும் சேர்த்து 10 அடிக்கு ஆக்கிரமிப்பு உள்ளதால் திருவிழா நாட்களில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியில் மிகுந்த நெருக்கடியும், சுவாமி அம்பாள் வாகனம் ஒருசேர சுற்றி வரமுடியாத சூழல் உள்ளது.

இதனால் நான்கு ரத வீதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளால் திருவிழா நாட்களில் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். ஆகையால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Ramanathaswamy Temple ,Rathveeti ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்