×

சங்கரன்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் தர்ணா

சங்கரன்கோவில், ஜூலை 16: சங்கரன்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஊதிய குழுவின் பரிந்துரைகளில் இருந்து ஓய்வூதியர்களை நீக்கி வைக்கும் நிதி மசோதாவை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய அரசின் நான்கு தொகுப்பாக தொகுக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய அரசின் 8வது ஊதிய குழுவின் பயன்களை ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.

ஓய்வூதியர் சங்க வட்ட தலைவர் குருசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுகுமார், ராஜு, சுப்பிரமணியன், மணி, ரவிச்சந்திரன், முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் மாரியப்பன் துவக்க உரையாற்றினார். நிர்வாகிகள் வெங்கடேஷ், மாரிமுத்து, ராமர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் பாலுசாமி நிறைவு உரையாற்றினார். வட்டபொருளாளர் சிக்கந்தர் நன்றி கூறினார் இதில் ஓய்வூதியர்கள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post சங்கரன்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Tarna ,Sankarankoville ,Sankaranco ,Association of All Sector Pensioners of the State ,Sankarankovo ,UNION OFFICE ,SANKARANKO, TENKASI ,DISTRICT ,TAMIL NADU ,ALL SECTOR PENSIONERS ASSOCIATION ,Sankarankov ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா