×

10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது: 24,568 பேர் எழுதினர்

விருதுநகர், மார்ச் 12: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 24,568 மாணவர்கள் தேர்வு எழுதினர். விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத மாணவர்கள் 12,310 பேரும், மாணவிகள் 12,575 பேரும் என மொத்தம் 25,885 பேர் விண்ணப்பத்திருந்தனர். இந்த தேர்விற்காக விருதுநகர் கல்வி மாவட்டம் சிவகாசி கல்வி மாவட்டம் என இரண்டு கல்வி மாவட்டங்களில் 115 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வை மாணவர்கள் 12,102 பேரும் மாணவிகள் 12,466 பேரும் என மொத்தம் 24,568 பேர் தேர்வு எழுதினர். 316 பேர் ஆப்செண்ட் ஆகினர். இந்த தேர்வை முன்னிட்டு அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை என மொத்தம் 2,131 பேர் பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

Tags : standard examination ,Virudhunagar ,standard government public examination ,Virudhunagar district ,standard government ,Virudhunagar district… ,
× RELATED தலைமை தபால் நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்