×

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து அமுதா ஐஏஎஸ் விளக்கம்..!!

சென்னை: நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார் என தமிழக அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். நாளை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” குறித்து அமுதா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், மின் இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் வருகின்றன. ஓய்வூதியம், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவை குறித்து கோரிக்கை மனுக்கள் வரபெற்றுள்ளன. இதுவரை 1.05 கோடி கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 1.01 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என அவர் கூறினார். அரசின் திட்டங்கள் குறித்து விளக்க அரசின் செய்தித் தொடர்பாளராக ஐ.ஏ.எஸ்.அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

The post உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து அமுதா ஐஏஎஸ் விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Amudha ,IAS ,Chennai ,Tamil ,Nadu ,Amudha IAS ,Chief Minister ,Chidambaram ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...