×

உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை அறிவிப்பு தமிழகத்துக்கு பெருமை: முதல்வர் நெகிழ்ச்சி

சென்னை: செஞ்சி மலைக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது தமிழ்நாட்டுக்கு பெருமைமிகு தருணமாக அமைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். செஞ்சி கோட்டை இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவ தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

‘கிழக்கின் ட்ராய்’ என அறியப்படும் செஞ்சிக் கோட்டை இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவ தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சோழர் கோயில்கள், மாமல்லபுரம், நீலகிரி மலை ரயில், மேற்கு தொடர்ச்சி மலை ஆகியவற்றின் வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து கம்பீரமான செஞ்சி மலைக்கோட்டை இப்பட்டியலில் தற்போது இணைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கும் அதன் நிலைத்த பண்பாட்டு மரபுக்கும் பெருமித தருணமாக இது அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை அறிவிப்பு தமிழகத்துக்கு பெருமை: முதல்வர் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Senji Fort ,Tamil Nadu ,Chennai ,Senji Hill ,K. Stalin ,CHENJI FORT ,UNESCO WORLD HERITAGE ,INDIA ,
× RELATED புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்...