×

தேர்தல் நடத்தை அமலில் இருப்பதால் ஜனநாயகன் வெளியிடுவதில் மீண்டும் சிக்கல்: தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: தேர்தல் நடத்தை அமலில் இருப்பதால் தவெக கட்சியின் தலைவராக உள்ள விஜய்யின் படம் வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதிக்குமா என்ற கேள்விக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: நடிகரும், த.வெ.க. கட்சித் தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் பட வெளியீட்டிற்கு தணிக்கைக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துவிட்டன. அவை அமலில் இருக்கும்போது, ஒரு நடிகனாகவும், கட்சித் தலைவராகவும் இருப்பவர் வேட்பாளராகிவிட்டால், அவர் நடித்த சினிமாவை வெளியிடுவதற்கு தேர்தல் கமிஷனின் ஒப்புதலை பெற வேண்டுமா என்று கேட்கிறீர்கள். இது நல்ல கேள்விதான். ஆனால் இது முதன்முறையாக நடக்கும் சம்பவம். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பதிலளிக்கிறேன். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுத்து விளக்கம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Electoral Officer ,Chennai ,Tamil Nadu ,Archana Patnaik ,Election Commission ,Vijay ,Thaweka party ,Chennai Secretariat… ,
× RELATED நீலகிரியில் பூத்துள்ள ஜெகரண்டா மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு