×

கள்ளக்குறிச்சியில் முதன்முறையாக பிரமாண்டமான ஜூராசிக் வேர்ல்டு பொருட்காட்சி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி துருகம் சாலை பகுதியில் முதன்முறையாக பிரமாண்டமான ஜூராசிக் வேர்ல்டு பொருட்காட்சி கடந்த 29ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஜூராசிக் வேர்ல்டு பொருட்காட்சியின் முகப்பு தோற்றம் பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பொருட்காட்சியில் குழந்தைகள் மகிழும் வகையில் ஒலி சத்தத்துடன் கூடிய பல்வேறு வகையான மிருகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டும் இல்லாமல் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து கொள்ள செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் பலூன் பவுசன், ஜம்பிங், வாட்டர் போட், குதிரை, மயில், மினி கார் ராட்டினங்கள், பெரியவர்களுக்கு ஜாய்ன்ட் வீல், கொலம்பஸ், கோஸ்டர், 3டி பேய் கவுஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும் இங்குள்ள கடைகளில் விளையாட்டு பொருட்கள், பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள், பேன்சி பொருட்கள் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பொருட்காட்சியில் டெல்லி அப்பளம், ஐஸ்கிரீம், ஜிகர்தண்டா, வாழைதண்டு சூப் உள்பட தின்பண்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

பள்ளி மாணவர்கள் இந்த பொருட்காட்சியை இலவசமாக கண்டுகளிக்கும் வகையில் மாணவர்களுக்கு இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதனை கொண்டு வரும் மாணவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பொருட்காட்சியானது வருகிற 27 ம்தேதி வரை நடைபெறும் என நிர்வாகத்தினர்  தெரிவித்தனர்.

The post கள்ளக்குறிச்சியில் முதன்முறையாக பிரமாண்டமான ஜூராசிக் வேர்ல்டு பொருட்காட்சி appeared first on Dinakaran.

Tags : Jurassic World ,Kallakurichi ,Durugam Salai ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...