×

முன்ஜாமின் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு

மதமோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் முன்ஜாமின் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கில் 2 முறை சம்மன் அனுப்பியும் மதுரை ஆதீனம் ஆஜராகாத நிலையில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல். மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு. வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் முன்ஜாமின் வழங்க வேண்டும் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். மதுரை ஆதீனம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு ஜூலை 14ம் தேதி விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

 

The post முன்ஜாமின் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : MOONJAMIN GORI MADURAI ADENAM ,CHENNAI PRIMARY SESSION COURT ,Addinam ,Chennai Primary Sessions Court ,Munjamin Gori Madurai ,Madurai Addinam ,Samman ,Munjam ,Munjamin Gori ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...