×

திராவிட இயக்கத்தை காக்க திமுகவுடன் கூட்டணி: வைகோ


மதுரை: திராவிட இயக்கத்தை காக்க திமுகவுடன் கூட்டணியை தொடர்வோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மதிமுக சார்பில் வருகிற அண்ணா பிறந்த நாளை (செப்.15) முன்னிட்டு திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு குறித்த மதுரை மண்டல செயல்வீரர் கூட்டம் தெப்பக்குளத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்தார். பின்னர் அவர் ெசய்தியாளர்களிடம் கூறியதாவது: முல்லைப்பெரியாறு, ஸ்டெர்லைட் வழக்குகளில் நானே வாதாடினேன்.

தமிழக வாழ்வாதாரங்களை காத்தது மதிமுக. திராவிட இயக்கத்தை காக்க திமுகவுடன் கூட்டணியை தொடருவோம். திமுகவிற்கு ஒரு அரணாகவும் தடுப்பாகவும் இருப்போம். அதிமுகவை திராவிட இயக்கமாகவே நாங்கள் கருதவில்லை. இங்கு சீட் பற்றி யாரும் பேசவில்லை. 12 தொகுதிகள் கேட்போம் என எந்த இடத்திலும் சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post திராவிட இயக்கத்தை காக்க திமுகவுடன் கூட்டணி: வைகோ appeared first on Dinakaran.

Tags : Tymuga ,Dravitha movement ,Wiko ,MADURAI ,SECRETARY GENERAL ,WAIGO ,DIMUGA ,DRAVITA MOVEMENT ,Madurai Zone Activists ,Anna ,Thepakul ,Dimuka ,Waiko ,Dinakaran ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி