×

அறையில் இருந்து அமர்ந்து அரசியல் செய்கிறார் விஜய்: செல்லூர் ராஜு விமர்சனம்

 

சென்னை: அறையில் இருந்து அமர்ந்து அரசியல் செய்கிறார் விஜய் என்று செல்லூர் ராஜு விமர்சனம் செய்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; விஜயை நாங்களாகவே திட்டவில்லை; ஆனால் எங்களை திட்டினால் நாங்கள் திட்டாமல் இருக்க முடியுமா? எங்களை விமர்சித்ததால் விஜயை நாங்கள் விமர்சித்தோம். அறையில் இருந்து அமர்ந்து அரசியல் செய்கிறார் விஜய். பொது வாழ்க்கையில் இப்படியெல்லாம் ஒரு நடைமுறையை பார்த்ததே இல்லை.

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து துக்கம் விசாரிப்பதெல்லாம் கொடுமை அல்லவா? போலீஸ் பாதுகாப்பு தேவை என்றால் கேட்டு பெற்று, கரூர் சென்று ஆறுதல் கூறியிருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்; அதிமுகவில் இணைவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஊடகம் மூலம் கேட்டிருக்கக் கூடாது. ஓ.பன்னீர்செல்வத்தின் நாடகம் எல்லாம் வேண்டாம், மக்களே சலித்துப்போய் விட்டார்கள். ஊடகத்தில் பேசி பேசிதான் ஓ.பன்னீர்செல்வம் இப்படி ஆகிவிட்டார் என்று கூறினார்.

Tags : Vijay ,Chennai ,Cellur Raju ,
× RELATED இந்தியாவில் யாரும் அடைய முடியாத 11.19...