×

ரயிலில் சிக்கி சிஐஎஸ்எப் தலைமை காவலர் பலி

சோழிங்கநல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் படலா போலையா(53). இவர் அரக்கோணத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணிபுரிந்தார். இந்நிலையில், படலா போலையா வேலைக்கு செல்ல நேற்று கூடூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது, டெல்லியில் இருந்து வந்த திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து படலா போலையா இறங்க முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து ரயிலில் சிக்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள், படலா போலையாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி படலா போலையா பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post ரயிலில் சிக்கி சிஐஎஸ்எப் தலைமை காவலர் பலி appeared first on Dinakaran.

Tags : CISF ,Choshinganallur ,Patala Polaiah ,Nellore district ,Andhra Pradesh ,Central Labour Protection Force ,Arakkonan ,Patala Bolaya ,Couture train station ,Delhi ,Dinakaran ,
× RELATED இன்றுமுதல் 3 நாள் விவசாயிகள் கூட்டம்: கலெக்டர் தகவல்