- அடையார்
- கேளம்பாக்கத்தில்
- கொளத்தூர்
- 28 கி.மீ.
- சிலேந்திரபாபு
- திருப்பூருர்
- கிமீ சைக்ளோத்தான்
- யானைச் சுற்று
- தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கம்
- சென்னை
- டிஜிபி
- சைலேந்திர பாபு...
திருப்போரூர். டிச.22: தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து எலிபண்டைன் சர்க்யூட் நடத்திய 28 கிமீ தூரத்திற்கான சைக்ளோத்தான் நிகழ்வு நேற்று நடந்தது. சென்னை அடையாறு பகுதியில் தொடங்கி கேளம்பாக்கம் அருகே கொளத்தூரில் நிறைவு பெற்றது. ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபு, எலிபண்டைன் நிர்வாக இயக்குநர் ரமணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தனியார் அறக்கட்டளையைச் சேர்ந்த 35 மனநலம் பாதிக்கப்பட்ட, பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் இந்த சைக்கிள் போட்டியில் பங்கேற்றனர். அவர்களில் 8 மாத கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் டேன்டெம் பைக்கில் பங்கேற்றார். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வினில் கலந்துகொண்ட சைலேந்திர பாபு கூறியதாவது:
மக்களின் அடிப்படை தேவை மனமகிழ்ச்சிதான், அது சைக்கிளிங்கில் கிடைக்கும். 50, 100 கிலோ மீட்டர் சைக்கிளிங் ஓட்டுபவர்கள் தினமும் எத்தனையோ பேரைச் சந்திப்பார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சி, உற்சாகம் தரும். இப்போது காற்று மாசுபாடு அதிகளவில் இருக்கிறது. அது மிகப்பெரிய பிரச்னையாக மாறி வருகிறது. மக்கள் குறைந்த தூரங்களுக்கு பயணிக்கையில் கார், பைக் வாகனங்களைத் தவிர்த்து, சைக்கிளை பயன்படுத்த வேண்டும். இது சுற்றுச்சூழலுக்கும், நம் மனதுக்கும், உடலுக்கும் நல்ல பயன் தரும். இவ்வாறு கூறினார்.
