- செங்கல்பட்டு
- கலெக்டர்
- சினேகா
- செங்கல்பட்டு துணை ஆட்சியர்
- மதுராந்தகம் வருவாய்
- பிரதேச ஆணையர்
- தம்பிராராம்...
செங்கல்பட்டு, டிச.23: செங்கல்பட்டு கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கோட்ட அளவில் இன்று செங்கல்பட்டு சப்-கலெக்டர் தலைமையில் நடக்கிறது. நாளை மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நாளை மறுநாள் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் இக்கூட்டம் நடைபெறும். விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி உரிய விவரங்கள் மற்றும் பதில்களை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.
