×

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை அமைக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

திரிசூலம்: காஞ்சிபுரம், தேவராஜசாமி கோயிலில் ஆகம விதிகளுக்கு முரணாக, கோயிலின் தொன்மையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ள உள்ள கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி தாத்தாதேசிகர் திருவம்சத்தார் சபை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில், கோயிலின் கருவறைக்கும், வெளி பிரகாரத்துக்கும் இடையில் நடைமேம்பாலம், கருவறை செல்லும் புனிதமான ஆறு படிகளுக்கு பதில் சாய்தளம் அமைக்க அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இவை, அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும், வழிபாட்டு உரிமைக்கு எதிராகவும் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோயில் செயல் அறங்காவலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கருவறைக்கு செல்லும் ஆறு படிகளும் செங்குத்தாக உள்ளதால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளால் ஏற முடியாத நிலை உள்ளது. தற்காலிகமாக சாய்தள பாதை அமைக்கப்படுகிறது. பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்யவும், அவசர காலங்களில் பக்தர்கள் எளிதில் வெளியேறவும் நடைமேம்பாலம் கட்டப்படுகிறது.இவை ஆகம விதிகளுக்கு எதிரானதல்ல. சன்னதி, தெய்வம், ஓவியங்களுக்கு இடையூறு இல்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சாய்தள பாதை, நடை மேம்பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு அனுமதியளித்து வழக்கை முடித்து

The post முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை அமைக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Trisulam ,Chennai High Court ,Thathadesikar Thiruvamsattar Sabha ,Devarajswamy Temple ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED சாதி பெயரைச் சொல்லி தாக்குதல் பெண்...