×

அதிமுக மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த 54 நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (54). அதிமுகவை சேர்ந்த இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். மளிகை கடை நடத்தி வந்த, இவர் கடையின் அபிவிருத்திக்காக மன்னார்குடியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் லோன் வாங்கி இருந்தார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜெகதீசன் சரிவர தவணை செலுத்தவில்லை. இதனால், நிலுவை தவணை தொகையை கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

நேற்று மதியம் பைக்கில் மன்னார்குடிக்கு சென்ற ஜெகதீசன் வஉசி சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விஷமருந்தி மயங்கி கிடந்தார். அவ்வழியே சென்ற சிலர் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெகதீசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து மன்னார்குடி நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post அதிமுக மாஜி ஊராட்சி தலைவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Majhi Orati ,Mannarkudi ,Jagadeesan ,Nemmeli ,Thiruvaroor District Mannarkudi 54 ,Orradachi Association ,Atamugawa ,Supreme Leader ,Majhi Suratsi Suicide ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...