×

பர்மிங்காம் டெஸ்ட்டில் ஆடும் லெவனில் குல்தீப் யாதவ்

பர்மிங்காம்: இந்தியா-இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் 2வது டெஸ்ட் பர்மிங்காமில் வரும் 2ம் தேதி தொடங்க உள்ளது. இதில் பதிலடி கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் பவுலிங் அட்டாக்கில் சிராஜுடன் அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் களம் இறங்க உள்ளது.

5 பவுலர்களுடன் இந்திய களம் இறங்க திட்டமிட்டுள்ளதால் ஷர்துல் தாகூருக்கு பதில் குல்தீப் யாதவ் களம் இறங்குவது உறுதியாகி உள்ளது. முதல் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு தோல்விக்கு கீழ் வரிசை பேட்டிங் சரிவு தான் காரணமாக அமைந்தது. இதனை சரிசெய்யும் வகையில் முகமது சிராஜுக்கு, பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பயிற்சி அளித்தார்.

The post பர்மிங்காம் டெஸ்ட்டில் ஆடும் லெவனில் குல்தீப் யாதவ் appeared first on Dinakaran.

Tags : Kuldeep Yadav ,Birmingham Test ,Birmingham ,India ,England ,Dinakaran ,
× RELATED ஆஸி-இங்கி. பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்னில் இன்று துவக்கம்