×

உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் தலைவரானார் சிந்து

டெல்லி: இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து. இவர் உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை பதவி காலம் வகிப்பார். மேலும், அவர் கவுன்சிலின் உறுப்பினராகவும், வாக்குரிமை கொண்ட உறுப்பினராகவும் பணியாற்றுவார். டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் துணைத் தலைவராகப் பணியாற்றுவார். ஆமி பர்னெட் (அமெரிக்கா), குய்லூம் கெயில்லி (பிரான்ஸ்), அபு ஹுபைடா (இந்தியா), மற்றும் தாரெக் அப்பாஸ் கரிப் சஹ்ரி (எகிப்து) ஆகியோர் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் செயல்படுவர். சிந்து 2017 முதல் இந்த கமிஷனில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். 2020 முதல் உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் இன்டெக்ரிட்டி அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். அவர் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்க வென்றவர் மற்றும் 2019 உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sindhu ,Badminton World Federation ,Delhi ,PV ,Athletes' Commission ,
× RELATED ஆஸி-இங்கி. பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்னில் இன்று துவக்கம்