×

பவுமாவிடம் மன்னிப்பு கேட்ட பும்ரா, பண்ட்

கொல்கத்தா: இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையே கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, பும்ரா பந்துவீச்சில் கேப்டன் பவுமா எல்.பி.டபிள்யூ ஆனார். இதுதொடர்பாக டி.ஆர்.எஸ் எடுப்பது குறித்து ரிஷப் பண்டிடம் விவாதத்த போது, பவுமா குள்ளமாக இருப்பதால் ‘பவுனா’ என கிண்டல் செய்து பேசினார். இது சர்ச்சையான நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் இந்திய அணியை மண்டியிட செய்வது போன்ற பொருள்படும்படியான ‘க்ரோவல்’ எனும் வார்த்தையை பயன்படுத்தினார். இது ரசிகர்கள் இடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தன்னிடம் பும்ரா, ரிஷப்பண்ட் மன்னிப்பு கேட்டதாக பவுமா கூறியுள்ளார். அதேநேரத்தில் தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர், இந்தியர்களை அவமதிப்பாக பேசியதையும் கண்டித்துள்ளார். இது குறித்து பவுமா கூறியதாவது: என்னைப் பற்றி அவர்களது மொழியில் ஏதோ பேசியது எனக்கும் தெரியும். போட்டி முடிந்த பிறகு மூத்த வீரர்களான பும்ரா, ரிஷப்பண்ட் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்கள். அவர்கள் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டதும் முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை. அது என்னவாக இருக்கும் என்று எனது ஊடக மேலாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அதில் வன்மம் வைத்துக்கொள்ள எதுவும் இல்லை. எனது பயிற்சியாளர் தெரிவித்த கருத்தும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு பவுமா கூறினார்.

Tags : Bumrah ,Pant ,Kolkata ,India-South Africa Test ,Rishabh Pant ,DRS ,Bhauna ,
× RELATED ஆஸி-இங்கி. பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்னில் இன்று துவக்கம்