×

கூட்டணி ஆட்சி என்பதில் எந்த தவறும் இல்லை: ஜி.கே.வாசன் ஆதரவு

சேலம்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சேலத்தில் நேற்று அளித்த பேட்டி: சேலத்தில் இருந்து சென்னைக்கு காலை நேரத்திலும் விமான சேவை செய்து தர வேண்டும். தமிழகத்தில் எங்களது கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தற்போதுள்ள கூட்டணியில் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கிறது. கூட்டணி ஆட்சி என்பதில் எந்த தவறும் இல்லை. அது அனைத்து கட்சிகளும் விரும்புவது தான். வருங்கால முதல்வர் யார் என்று எல்லோருக்கும் தெரியும்.

அமித்ஷாவுக்கும் தெரியும். தமாகா கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கும். அதற்காக நாங்கள் உழைப்போம். அதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. தமாகா கூட்டணியை ஒன்றிணைக்கும் கட்சியாக இருக்கும். எங்களுடைய பலத்திற்கு ஏற்றவாறு பயன் கிடைக்கும் என்று நம்புகிறேன். கூட்டணி கட்சிகளும் அதனை நினைவில் வைத்து கொள்வார்கள். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

The post கூட்டணி ஆட்சி என்பதில் எந்த தவறும் இல்லை: ஜி.கே.வாசன் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,Salem ,TAMAK ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...