×

விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி புஸ்ஸி, ஆதவ் உள்பட 8 பேருக்கு சிபிஐ சம்மன்: 29ம் தேதி டெல்லி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு

கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொது செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் கரூர் சிபிஐ விசாரணை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு கடந்த மாதம் 24, 25 ஆகிய 2 நாட்கள் விசாரணை நடந்தது. இவர்களை தொடர்ந்து கரூர் எஸ்பி ஜோஸ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேமானந்த், டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் வரும் 29ம்தேதி காலை 10 மணியளவில் நேரில் ஆஜராக வேண்டும் என புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இதேபோல், அன்றைய தினம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி கரூர் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகிய 4 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விஜய் நடித்த ஜனநாய கன் பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடப்ப தால் அதில் பங்கேற்க புஸ்ஸி சென்று உள்ளார். ஆதவ் அர்ஜூனாவும் மலேசியா செல்ல உள்ளார். இருவரும் மலே சியா வில் இருந்து டெல்லி சென்று 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.

Tags : CBI ,Pussy ,Adhav ,Delhi ,Karur ,Thavega ,General Secretary ,Pussy Anand ,Joint General Secretary ,Nirmal Kumar ,
× RELATED சட்டசபை தேர்தலில் போட்டியா? நடிகை குஷ்பு பேட்டி