- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சபரிமலை
- புல்மேடு
- கூடலூர்
- கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
- உப்புப்பாறை
- ராஜ்குமார்
- கும்பகோணம்
கூடலூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் புல்மேடு பகுதி வழியாக சபரிமலைக்கு நேற்று நடைபயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது, உப்புப்பாறை பகுதியில் சென்றபோது, கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (52) மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதே போல், கரூரை சேர்ந்த 5 பேர் குழு வனப்பாதையில் பயணம் செய்தபோது கரூரை சேர்ந்த பாலாஜி (43) பூங்காவனத்திற்கு அருகே மயங்கி விழுந்துள்ளார். வெவ்வேறு இடங்களில் மயங்கி விழுந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் போலீசார், வனத்துறையினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
