×

ஜி.ஹெச்., முன்பு கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

 

மல்லசமுத்திரம், ஜூன் 27: ராமாபுரம் அரசு மருத்துவமனை அருகில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமாபுரத்தில், அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என பலரும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையின் நுழைவு வாயில் அருகில், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், குப்பை கழிவுகளை அகற்ற நடவடக்கை எடுக்கவில்லை. எனவே, அதிகாரிகள் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றுவதுடன், இனி வரும் காலங்களில் அப்பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

The post ஜி.ஹெச்., முன்பு கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Ramapuram Government Hospital ,Ramapura ,Mallasamudram Union ,Government Hospital ,
× RELATED சந்து கடையில் மது விற்ற 2 பேர் கைது