×

திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேந்தமங்கலம், டிச.25: புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராமலிங்கம் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார். புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, திமுக கூட்டணி கட்சியின் சார்பில், 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, புதிய மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் கௌதம், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலைத்திட்டத்தை முடக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Senthamangalam ,Ramalingam MLA ,Puduchattaram Panchayat Union ,DMK alliance ,Mahatma Gandhi ,
× RELATED நகர்மன்ற சாதாரண கூட்டம்