திருச்செங்கோடு, டிச. 25: பெரியாரின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு, திமுக கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் நடேசன், கார்த்திகேயன், மாநில மகளிர் சமூக வலைதள பொறுப்பாளர் ரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் காங்கிரஸ், மதிமுக, கொமதேக, ஆதித்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக நகர அவைத்தலைவர் மாதேஷ், துணை செயலாளர்கள் தேவராஜன், ராஜவேல், கலைவாணி, அன்பு, இளங்கோ, பொருளாளர் பெருமாள், மாவட்ட பிரதிநிதிகள் கணபதி, ரமேஷ், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
