- இராசிபுரம்
- வேலம்பாளயம்
- நாமக்கல் மாவட்டம்
- யூனியன்
- திமுக
- ஜெகந்நாதன்
- மாவட்ட செயலாளர்
- ராஜேஷ்குமார் எம்.பி
ராசிபுரம், டிச.23: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலம்பாளையம் பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, புதிய இணைப்புகளில் குடிநீர் விநியோகம் துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, புதிய குடிநீர் இணைப்புகளில் குடிநீர் வழங்கினர். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், ரவி, பன்னீர்செல்வம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

