- துணை முதலமைச்சர்
- பரமத்திவேலூர்
- இருக்கூர்
- கபிலர்மலை மேற்கு ஒன்றிய தி.மு.க.
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உதயநிதி ஸ்டாலின்
- கபிலர்மலை மேற்கு ஒன்றியம்
- சாமிநாதன்.…
பரமத்திவேலூர், டிச. 25: பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர்மலை மேற்கு ஒன்றிய திமுக சார்பில், இருக்கூரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கபிலர்மலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் கோபால் வரவேற்றார். ஒன்றிய பொறுப்பாளர்கள் தளபதி சுப்பிரமணியம், சரவணகுமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், பேரூராட்சி தலைவர்கள் மணி, கருணாநிதி, டாக்டர் சோமசேகர், பேரூராட்சி துணை தலைவர்கள் ரமேஷ்பாபு, முருகவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி முன்னிலை வகித்தனர். இதில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் உமாராணி, கொமதேக தலைமை பேச்சாளர் மஞ்சுநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக தலைமைக்கழக பேச்சாளர் கரூர் முரளி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொறியாளர் அணி தலைவர் அருண், துணை அமைப்பாளர் ஜெகதீசன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
