×

ஜூலை 24ஆம் தேதி வரை இந்தியா, பாக். வான்வெளிகள் மூடல்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் உருவானது. எனவே ஏப்ரல் 23 முதல் பாக். வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே போல் இந்திய வான்வெளியை பயன்படுத்த பாக். விமானங்களுக்கும் தடை நீட்டிக்கப்பட்டது.

மே 23 அன்று அது மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த தடை மேலும் ஒரு மாதம், அதாவது ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை பாக். அரசு அறிவித்துள்ளது. இதே போல் பாக். விமானங்களுக்கு இந்திய வான்வெளியை ஜூலை 24ஆம் தேதி வரை மூடுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

 

The post ஜூலை 24ஆம் தேதி வரை இந்தியா, பாக். வான்வெளிகள் மூடல் appeared first on Dinakaran.

Tags : India, Pak ,Islamabad ,India ,Pakistan ,Pahalgam ,attack ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஏர் இந்தியா விமான விபத்து இன்ஜினுக்கு...