×

2763 நாட்களுக்கு பின் இந்திய அணியில் மீண்டும் கருண் நாயர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நேற்று, 2763 நாட்களுக்கு பின்னர், இந்திய அணியில் கருண் நாயர் மீண்டும் ஆடினார். கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கருண் நாயர், கடந்த 2017ம் ஆண்டு மார்ச்சில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக ஆடினார்.

அதன் பின், 2763 நாட்களுக்கு பின், இங்கிலாந்தில், அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக நேற்று கருண் நாயர் மீண்டும் ஆடினார். சமீபத்தில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும், ஐபிஎல்லிலும், சிறப்பாக ஆடியதால், அவருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

The post 2763 நாட்களுக்கு பின் இந்திய அணியில் மீண்டும் கருண் நாயர் appeared first on Dinakaran.

Tags : Karun Nair ,England ,Kerala ,Australia ,Dinakaran ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...