×

சீரி ஏ கால்பந்து பைசாவை வீழ்த்தி ஜுவன்டஸ் அபாரம்

மிலன்: இத்தாலியில் நடந்து வரும் புகழ்பெற்ற சீரி ஏ கால்பந்தாட்ட போட்டிகளில் நேற்று, ஜுவன்டஸ் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் பைசா அணியை வெற்றி கண்டது. இத்தாலியில் நடத்தப்படும் கால்பந்தாட்ட போட்டிகளில், சீரி ஏ கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக திகழ்கின்றன. கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி முதல் ஆடப்படும் இப்போட்டிகள், வரும் 2026 மே 24ம் தேதி வரை நடைபெறும்.

இதன் ஒரு பகுதியாக நேற்று நடந்த போட்டியில் ஜுவன்டஸ்-பைசா அணிகள் மோதின. இப்போட்டியின் துவக்கம் முதல் இரு அணி வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக ஆடியதால், முதல் பாதியில் கோல் எதுவும் போட முடியவில்லை. இருப்பினும், இரண்டாவது பாதியில் ஜுவன்டஸ் அணி வீரர்களின் கை ஓங்கியது.

போட்டியின் 73வது நிமிடத்தில் அந்த அணியின் பியரி கலுலு தனது அணிக்காக முதல் கோலை அற்புதமாக அடித்து முன்னிலைப்படுத்தினார். போட்டியின் இறுதிக் கட்டத்தில் 90+2வது நிமிடத்தில் ஜுவன்டஸ் அணி வீரர் கெனான் யிடிஸ் 2வது கோல் போட்டு அசத்தினார். அதனால், ஜுவன்டஸ் 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Tags : Juventus ,Pisa ,Serie A ,Milan ,Italy ,
× RELATED இலங்கையுடன் இன்று 4வது டி.20 போட்டி:...