×

நியூசி.க்கு எதிரான ஒரு நாள் தொடர்; ஹர்திக், பும்ராவுக்கு ஓய்வு: பிசிசிஐ திட்டம்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக்பாண்டியா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தற்போது உலகின் நம்பர் 1 ஒருநாள் அணியாக இருக்கும் இந்தியா, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி வதோதராவில் ஜனவரி 11லும், 2வது போட்டி ஜனவரி 14ல் ராஜ்கோட்டிலும், 3வது போட்டி ஜனவரி 18ல் இந்தூரிலும் நடக்கிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா அசுர ஃபார்மில் இருந்தார்.

3 இன்னிங்ஸ்களில் 142 ரன்கள் குவித்து, 186.84 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டினார். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் மற்றும் 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இருப்பினும், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு, அவருக்குப் பணிச்சுமையை நிர்வகிக்கும் அடிப்படையில் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. ஹர்திக் பாண்டியா கடைசியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில்தான் ஒருநாள் போட்டியில் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவும் இந்தத் தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. பும்ரா கடைசியாக 2023 உலகக்கோப்பையில் விளையாடினார். அவருக்கும் டி20 உலகக்கோப்பைக்காக பாதுகாப்பாக ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஹர்திக் மற்றும் பும்ரா இருவரும் முழு உடற்தகுதியுடன் இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த ஓய்வு அளிக்கப்படுகிறது.

Tags : New Zealand ,Hardik ,Bumrah ,BCCI ,Mumbai ,Hardik Pandya ,India ,
× RELATED சீரி ஏ கால்பந்து பைசாவை வீழ்த்தி ஜுவன்டஸ் அபாரம்