×

டெல்லி அணிக்காக மீண்டும் களமிறங்கும் கோஹ்லி?

பெங்களூரு: விஜய் ஹசாரே கோப்பைக்காக, வரும் ஜனவரி 6ம் தேதி நடக்கவுள்ள ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி ஆடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
உள்நாட்டு அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதை இந்திய அணி நட்சத்திர வீரர்கள் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா போன்றோர் தவிர்த்து வந்தனர். ஆனால், இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ சமீபத்தில் கூறியிருந்தது.

அதையடுத்து, ரோகித், கோஹ்லி, விஜய் ஹசாரே கோப்பைக்கான துவக்க போட்டிகளில் ஆடியிருந்தனர். டெல்லி அணிக்காக ஆடிவரும் விராட் கோஹ்லி, முதல் இரு போட்டிகளில் ஆடிய பின்னர் லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில், வரும் ஜனவரி 6ம் தேதி, பெங்களூருவில் ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோஹ்லி ஆடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரோஹன் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லி அணிக்காக கோஹ்லி ஆடிய முதல் இரு போட்டிகளில் முறையே, 131, 77 ரன்களை அவர் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Kohli ,Delhi ,Bengaluru ,Virat Kohli ,Vijay Hazare Trophy ,Railways ,
× RELATED 3 குழந்தைகள் உள்ள நிலையில் பாக்....